
நியு டெல்லி; ஆக 27 – ஒரு சிலர் தவறுகள் புரிய ஏதேதோ காரணங்களாக அமைந்துள்ளன. ஆனால், இந்தியா நியு டெல்லியில், ஒரு தம்பதி ஒரு மாத ஆண் குழந்தையைக் கடத்தியதற்கான காரணம் மிக விநோதமாக இருக்கின்றது.
சகோதர சகோதரிகளுக்கிடையே உள்ள பந்தத்தை மேலும் வலுவாக்க கொண்டாடப்படுவதே ராக்கி தினமாகும். இந்நாளில் தங்களது 17 வயது மகள் ராக்கி கயிறு கட்ட தங்களுக்கு மகன் இல்லாத காரணத்தால், ஆண் குழந்தை ஒன்றை கடத்த முடிவெடுத்தாக கூறியுள்ளனர் 41 மற்றும் 36 வயதான அந்த தம்பதியர்.
மேலும் விசாரித்ததில், அவர்களின் 17 வயது மகன், கடந்த ஆண்டு மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதால், சோகம் தாங்காமல் இருந்த சமயத்தில்தான், தங்களது மகள் ராக்கி தினம் வருகிறது கயிறு கட்டிவிட ஒரு தம்பி வேண்டும் என கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இச்செயலை செய்து விட்டதாக கூறியுள்ளனர் அத்தம்பதியர்.
வீடற்றவர்களிடமிரிருந்து குழந்தை ஒன்று காணாமல் போனதாக புகார் பெறவே, விசாரித்த போலிசார் இக்குற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.