Latestஇந்தியாஉலகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; நளினி உட்பட அறுவர் விடுதலை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ 11 -Rajiv Gandhi கொலை வழக்கில் Nalini , Ravichandran உட்பட ஆறு பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த பேரறிவாளன் இவ்வாண்டு மே மாதம் 18 – ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து Nalini – யும் மற்றவர்களும் விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான வழக்கு முடிவடைந்த நிலையில் Nalini , Murugan, Ravichandran, Santhan, Robert Payas , Sriharan ஆகிய 6 பேரையும் Rajiv Gandhi கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதிகள் பி.ஆர். சுவாய். பி,வி நாகரத்தினம் ஆகியோர் இன்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு 2018 – ஆம் ஆண்டு தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்ததையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. 33 ஆண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த பின்னர் அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் பிரதமர் Rajiv Gandhi கடந்த 1991 – ஆம் ஆண்டு Sriperumbudur – ரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார், அவரது படுகொலை தொடர்பாக 1998 – ஆம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் Nalini, Murugan, Santhan, Robert Payas, Ravichandran ஆகிய எழுவர் தூக்குத் தண்டனை கைதியாக இருந்தனர். பின்னர் இவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!