பேங்காக் , ஜன 5 – பாம்புகளில் ராஜ நாகம் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். அவை தீண்டினால் அதன் விஷம் ஒருவரின் சுவாச முறையை விரைவாக பாதித்து மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை உருவாக்கிவிடும் . ராஜநாகத்தை பிடிப்பது விஷப் பரிட்சையாக இருந்தாலும் பாம்பு பிடிப்பாளர்கள் இதற்கெல்லாம் அச்சமடைவதில்லை. தாய்லாந்தில் Krabi வட்டாரத்தில் ஆடவர் ஒருவர் எந்தவொரு பொருளின் துணையின்றி 10 கிலோ ராஜ நாகத்தை தமது இரண்டு கைகளை மட்டுமே பயன்படுத்தி பிடித்த காணொளி சமுக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Related Articles
Check Also
Close