வாஷிங்டன், பிப் 8- சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஹூலா வளையங்களை இடுப்பில் சுற்றி விளையாடிய அனுபவமுண்டா?
நம் இடுப்பு அசையும் திசைக்கு ஏற்ப வளையம் சுழற்றப்படும் இந்த விளையாட்டு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், செய்வது கடினமே. உடலின் அனைத்து பாகங்களும் வளையத்துக்கு ஏற்றாற்படி வளைந்துகொடுத்தால் மட்டுமே, இந்த விளையாட்டை இலாவகமாக விளையாட முடியும்.
அதனால்தான் பொதுவாக ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் இந்த ஹூலா வளைய விளையாட்டில் கைதேர்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள்.
அந்த வகையில், Las Vegasசைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் உலகிலேடே பெரிய ராட்சச ஹூலா வளையத்தைச் சுழற்றி அதற்கு கின்னஸ் சாதனையும் பெற்றிருக்கின்றார்ர்.
Getti Kehayova எனும் அந்தப் பெண், கிட்டதட்ட 5.18 மீட்டர் அல்லது 17 அடி குறுக்களவு கொண்ட ராட்சச வளையத்தைச் சுழற்றும் அந்தக் காட்சி கின்னஸ் உலக சாதனை புத்தக்கத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.