ஜெருசலம், பிப் 17 – உலகில் அதிக எடையுள்ள ( Strawberry ) பழத்தை உற்பத்தி செய்து , கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கின்றார் இஸ்ரேலைச் சேர்ந்த விவசாயி .
விவசாயி ஜாஹி ஏரியல் ( Chahi Ariel ) அறுவடை செய்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழத்தின் எடை 289 கிராமாகும். வழக்கமாக கிடைக்கக் கூடிய ஸ்ட்ராபெர்ரி பழத்தின் எடையைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதல் எடை அதுவாகும்.