
கோலாலம்பூர், மார்ச் 28 – வேலை கடினம் என்பதோடு, குறைவான சம்பளத்தால், பூமிபுத்ரா அல்லாதவர்கள், ராணுவத்தில் இணைவதில் அதிகம் நாட்டம் கொண்டிருக்கவில்லை.
அதன் காரணமாக அந்த பாதுகாப்பு படையில், 3 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களே இணைந்து சேவையாற்றுவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ மொஹமட் ஹாசான் ( Datuk Seri Mohamad Hasan ) தெரிவித்தார்.
கடினமான வேலை, குறைவான சம்பளம் இவற்றுடன், பெருநாட்காலங்களின் போது குடும்பத்தாரோடு நேரத்தை செலவிட முடியாதது, எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது போன்ற காரணங்களால், பூமிபுத்ரா அல்லாதவர்கள் ராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டுவதில்லை என அவர் மேலவை கேள்வி பதில் நேரத்தின் போது தெரிவித்தார்.
அதே வேளை, ராணுவப் படையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு Kuota – ஒதுக்கீட்டு முறை ஒன்று இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.