கோலாலம்பூர், பிப் 11 – நூரி ஹெலிகப்டர்களுக்கு மாற்றாக, அரச மலேசிய வான் படை , Leonardo AW 139 ரகத்தை சேர்ந்த 4 ஹெலிகப்டர்களைப் பெற்றிருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் தெரிவித்தார்.
தனியார் நிறுவனமொன்றிடமிருந்து வாடகை முறையின் கீழ், அந்த ஹெலிகப்டர்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஹெலிகப்டர்களை கொள்முதல் செய்வதைக் காட்டிலும் வாடகைக்கு எடுப்பது செலவைக் குறைக்குமென அமைச்சர் கூறினார்.