கோலாலம்பூர், மார்ச் 4 – சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு, பகாங் ஆகிய பகுதிகளில் நேற்று அரச மலேசிய ராணுவப் படையின் விமானங்கள், தாழ்வான நிலையில் பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்ட காட்சியை பலர் கண்டு களித்திருப்பர்.
ஆனால், அந்த பயிற்சியினால் ஏற்பட்ட இரைச்சலால் தேர்வின்போது எங்களது கவனம் சிதறியதாகக் கூறியுள்ளனர் , SPM தேர்வை எழுதி வரும் மாணவர்கள் சிலர்.
அதன் தொடர்பில் மாணவர்கள் தங்களது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தி-யிருந்ததைக் காண முடிந்தது. அவர்களின் பதிவினைப் படித்து அனுதாபம் கொண்ட சிலர், தென் கொரியாவில் , தொந்தரவு எதுவும் இன்றி மாணவர்கள், கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக, விமானப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நடைமுறை நாட்டில் கடைப்பிடிக்க வேண்டுமென தங்களது கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இவ்வேளையில் அந்த ராணுவ விமானப் பயிற்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த வேளையில், சம்பந்தப்பட்ட SPM மாணவர்கள் சிறிய விஷயத்தை பெரிதுப் -படுத்தியிருப்பதாக சில வலைத்தளவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.