GE15Latestமலேசியா

ராம் கர்ப்பால் சிங் சரஸ்வதி துணையமைச்சர்களாக நியமனம்

புத்ரா ஜெயா, டிச 9- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அறிவித்த நிலையில் மொத்தம் 27 பேர் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
DAPயின் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் பிரதமர் துறையின் கீழ் சட்டம் மற்றும் சீர்திருத்த பிரிவிற்கு துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவரான சரஸ்வதி கந்தசாமி தொழில் முனைவர் , கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அன்வார் அறிவித்தார்.
சரஸ்வதி செனட்டராக நியமிக்கப்பட்டு துணையமைச்சராக பதவியேற்கவுள்ளார்
அம்னோவின் தலைமை செயலாளர் அகமட் மஸ்லான் மற்றும் Bukit Mertajam நாடாளுமன்ற உறுப்பினர் Steven Sim ஆகியோர் நிதியமைச்சில் இரண்டு துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் Teo Nie Ching , , Bayan Baru நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Txi ஆகியோரும் துணையமைச்சர்களாக நியமிக்ககப்பட்டிருக்கின்றனர்.
உள்துறை அமைச்சின் துணை அமைச்சராக டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அனுவார் பதவியேற்கவுள்ள நிலையில், முன்னாள் மலாக்கா மாநில முதல்வரான அட்லி சஹாரி பாதுகாப்பு துணையமைச்சர் பதவி ஏற்கின்றார்.
Iskandar Puteri நாடாளுமன்ற உறுப்பினர் Liew Chin Tong அனைத்துலக வாணிக தொழில்துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். Lim Kit Siang மகளான Lim Hui Ying கல்வி துணை அமைச்சராக பதவி ஏற்கின்றார்.
இந்நிலையில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு மற்றும் சமய விவகார அமைச்சுக்கு துணையமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை.
மாட்சிமை தங்கிய பேரரசரை சந்தித்தபின் பிரதமர் அன்வார் ஒற்றுமை அரசாங்கத்தின் துணையமைச்சர் பட்டியலை இன்றிரவு 8.30 அளவில் அறிவித்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட துணையமைச்சர்கள் நாளை மாலை மூன்று மணிக்கு இஸ்தானா நெகாராவில் மாட்சியை தங்கிய பேரரசர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!