
கோலாலம்பூர், செப் 12 – அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மேலும் சரிவு கண்டிருக்கிறது.
நேற்று பரிவர்த்தனையின் இறுதியில், மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலருக்கு எதிராக 4 ரிங்கிட் 52 சென்னாக பதிவானது .
ஆசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்பதால், முதலீட்டாளர்கள் ஆபத்தான சொத்துகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான சொத்தில் முதலீடு செய்வதால் , இந்நிலை உருவாகுவதற்கு காரணமென, பங்கு சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.