Latestமலேசியா

ரிதம் அறவாரியம் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் மக்களுக்கு உதவிப் பொருள்கள்

ஈப்போ, அக் 22 – QI குழுமத்தின் சமுக நடவடிகை முயற்சியாக ரிதம்
அறவாரியத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் நகரில் தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவிட் தொற்றினால் நிதி
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட B 40 வசதிக் குறைந்த பிரிவைச்
சேர்ந்த 60 குடும்பங்களுக்கு இந்த நிகழ்வில் உணவு பொருட்கள்
வழங்கப்பட்டது. தீபாவளி பெருநாளின்போது அவர்களுக்கு உதவும்
நோக்கத்தில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ரிதம் அறவாரியம் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் மஹாராணி
கற்றல் மைய திட்டத்தை உள்ளூர் மக்கள் அறிந்துகொள்வதற்கான
வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி அமைந்தது. சுய ஆற்றலை மேம்படுத்திக்
கொள்வதற்காக நடைமுறை தொழில் திறன் பயிற்சி கோவிட் தொற்று
பரவலினால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மேற்கொள்ள முடியாமல்
இருந்தது. நம்மை சுற்றியுள்ள இடத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு
மஹாராணி சமூக திட்டத்தை அமல்படுத்துவதற்கு சமூகத்துடன் இணைந்து
நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என ரிதம் அறநிறுவனத்தின்
தலைவரான சாந்தி பெரியசாமி தமது உரையில் தெரிவித்தார்.

மஹாராணி கற்றல் மையத்தின் மூலம் மாணவிகள் தங்களது பள்ளிப்
பாடங்களை கற்பதற்கும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை
முடிப்பதற்கும் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு கை தொழில் மற்றும் தொழில் திறன் பயிற்சியும்
வழங்கப்படுகிறது. பாரம்பரிய, நவீன நடனங்களையும் கைவினை
திறனையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு
கிடைப்பதையும் சாந்தி சுட்டிக்காட்டினார்.

2015ஆம் ஆண்டு சுங்கை சிப்புட்டில் தொடங்கப்பட்ட MLL எனப்படும்
மஹாரானி கற்றல் மையம் ஏழ்மையான தோட்டத் தொழிலாளர்களின்
பெண் பிள்ளைகள் கல்வி, தொழில் திறன் மற்றும் அவர்களது வாழ்கைக்கு
தேவையான திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
2010 முதல் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மஹாராணி
செயல் நடவடிகையினால் 7,500க்கும் மேற்பட்ட பெண்கள்
பயன் அடைந்துள்ளனர். தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்ட மஹாராணி
கற்றல் மையத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்களுக்கு கிடைத்த
அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!