
கெடாவில் கறவை மாடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ஊக்குவிப்பு தொகையாக 20.3 மில்லியன் ரிங்கிட்டை போலியாக கோரிக்கை விடுத்தது தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ள இருவர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
51 மற்றும் 52 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களை தடுத்து வைப்பதற்காக Macc மனுச் செய்ததைத் தொடர்ந்து அலோஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2015 – ஆம் ஆண்டில் கறவை மாடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கான ஊக்குவிப்பு தொகையை பெறுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் போலி பணக் கோரிக்கையை விண்ணப்பித்தது தொடர்பான விசாரணைக்காக அந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.