Latestவிளையாட்டு

ரியல் மெட்ரிட் செல்சியுடன் டிராவானது

லண்டன், ஏப் 28 – ஐரோப்பிய லீக் வெற்றியாளர் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் கட்ட அரையிறுதியாட்டத்தில் ஸ்பெய்னின் Real Madrid 1-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் Chelseaயுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டம் தொடங்கிய 14 ஆவது நிமிடத்தில் Christian Pulisic மூலம் ஒரு கோலை அடித்து Chelsea முன்னணியில் இருந்தது. எனினும் 29 ஆவது நிமிடத்தில் Real Madrid-இன் முன்னணி ஆட்டக்காரர் Karim Benzema அற்புதமான ஒரு கோலை அடித்து நிலைமையை சமப்படுத்தினார்.
இந்த ஆட்டத்தின் பெரும்பகுதியை Chelsea குழுவினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் அடுத்தடுத்து வெற்றி கோல்களை அடிக்க தவறியதால் இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!