
பாரிஸ், ஜன 27 – பிரான்ஸின் ரியூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட 38 பேர் அவர்களது தாயகமான இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக் களப்பு ,மன்னார், கிளிநொச்சி , முல்லைத் தீவு, திரிகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த அவர்கள் கடல் மார்க்கமாக ரியூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது இம்மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ரியூனியன் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.