Latestமலேசியா

2 மில்லியன் ரிங்கிட் மின் கட்டணம் செலுத்தவில்லை; அடுக்ககத்தின் நிர்வாகத்திற்கு எதிராக குடியிருப்புவாசிகள் போலீசில் புகார்

கோலாலம்பூர், ஜன 15 – கோலாலம்பூர் புறநகரிலுள்ள அடுக்ககத்தின் கூட்டு நிர்வாகம் 20 மில்லியன் ரிங்கிட் பாக்கியை மின் கட்டமான வைத்திருப்பது குறித்து குடியிருப்பு வாசிகள் 17 போலீஸ் புகார்களை செய்துள்ளனர். Bandar Tasik Selatan 1 இல் உள்ள மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இந்த புகாரை செய்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் பிரிவின் இயக்குனர் போலீஸ் அதிகாரி Ramli Yoosuf தெரிவித்தார். கூட்டு நிர்வாகத் தலைவர் நிதியை மோசடி செய்திருப்பதாக முதல் புகார்தாரர் புகார் செய்தார். எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்து கூட்டு நிர்வாகத்தின் தலைவர் மற்றொரு புகாரை செய்திருப்பதாக Ramli கூறினார்.

5 புளோக்குகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளும் குறைந்தது 20 மில்லியன் ரிங்கிட் மின் கட்டண பாக்கியை செலுத்தத் தவறியதால் தெனாகா நேசனலின் மின் விநியோகம் வெட்டப்படும் என்ற எச்சரிக்கை நோட்டிஸ் கண்டதைத் தொடர்ந்து இந்த புகாரை செய்ததாக 35 வயதுடைய குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு யூனிட் வீடுகளுக்கும் 50 ரிங்கிட் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம்தேதி முதல் எந்தவெரு கட்டணமும் செலுத்தப்படவில்லையென கூறப்பட்டதை தொடர்ந்து புகார் செய்துள்ளதாக புகார்தாரர் ஒருவர் தெரிவித்தார். தாங்கள் செலுத்திய பணம் முறைகேடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கூட்டு நிர்வாகத் தலைவருக்கு எதிராக குடியிருப்பு வாசிகள் புகார் செய்திருப்பதாக ரம்லி கூறினார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து புகார்தாரர்களிடமிருந்து புகார் பெற்று வருவதால் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!