
கோலாலம்பூர், ஜன 5 – 10 லட்சம் ரிங்கிட்டை சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டிலிருந்து அம்னோவின் மூத்த தலைவர் Sharir Samad-ட்டை இன்று உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கை அரசு தரப்பு தொடர விரும்பவில்லையென டி.பி.பி Rasiyidah Murni Azmi நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து ஷாரிரை நீதிபதி Jamil Hussin விடுதலை செய்தார். 2013-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிடமிருந்து பெற்ற 10 லட்சம் ரிங்கிட்டை உள்நாட்டு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டவில்லை என ஷாரிர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
சட்டவிரோத பண பறிமாற்ற சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது. ஷாரிருக்கு நஜீப் வழங்கிய 10 லட்சம் ரிங்கிட் 1 எம்.டி.பியிலிருந்து வந்த பணம் அதுவென கூறப்பட்டது. அரசாங்க தரப்பு ஷாரிருக்கு எதிரான வழக்கை தொடர விரும்பாததற்கு காரணம் என்னவென்று நீதிபதி வினவியபோது வழக்கை தொடர வேண்டாமென தங்களுக்கு பணிக்கப்பட்டதாக Rasyidah மறுமொழி தெரிவித்தார்.