
கோலாலம்பூர், பிப் 4- 100.000 ரிங்கிட்டிற்கும் குறைந்த விலை வீடுகளை கட்டுவதற்கு வீடமைப்பு மேம்பாட்டாளர்களும் குத்தகையாளர்களும் தயாராய் இல்லையென மலேசிய வீடமைப்பு குத்தகையாளர் சங்கத் தலைவர் Hasniro Hasbullah தெரிவித்தார். உதாரணத்திற்கு 800 சதுர அடி பரப்பில் வீடுகளை கட்டுவதற்கு மேம்பாட்டாளர்கள் அல்லது குத்தகையாளர்கள் விரும்பினால் அவர்கள் குறைந்தபட்சம் 20 விழுக்காடு லாபம் பெற விரும்புகின்றனர். 20 விழுக்காடு செலவுகள் உயர்ந்ததால் லாபம் குறைவாக இருப்பதாக அவர்கள் கருதுவதாக Hasniro கூறினார்.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் வாங்கக்கூடிய விலையிலான வீடுகளின் விலை தற்போது 198,000 ரிங்கிட் முதல் மூன்று லட்சம் ரிங்கிட்டாக உள்ளது. அதேவேளையில் SelangorKu வீடுகள் 100,000 ரிங்கிட் முதல் 250,000 ரிங்கிட்வரையிலான விலையில் விற்கப்படுகிறது. 42 ,000 ரிங்கிட் முதல் 84,000 ரிங்கிட் வரையிலான வீடுகள் குறைந்த விலை வீடாக விற்கப்படுவதோடு மலாய் ரிசர்வ் நிலத்திலும் அல்லது கிராமப் புற பகுதியிலும் நிர்மாணிக்கப்படுவதாக Hasniro தெரிவித்தார்.