
ஷா அலாம், மார்ச் 31 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் RM11. 034 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள methamphetamine மற்றும் Heroin பறிமுதல் செய்யப்பட்டதோடு 3 பெண்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் ,சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார்.
298.987 கிலோகிரேம் methamphetamine மற்றும் 17 . 6 கிலோ Heroin பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப் பொருள் சந்தையில் மிகப்பெரிய விநியோக கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக Hussein Omar தெரிவித்தார்.