Latestமலேசியா

ரி.ம 170,000 மறைக்க உதவிய குற்றத்தை பெண்மணி மறுத்தார்

கோலாலம்பூர் , டிச 30 – 170,000 ரிங்கிட் பணத்தை மறைக்க முயன்றதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை பெண் ஒருவர் மறுத்தார். 48 வயதுடைய மற்றொரு பெண்ணுக்கு சொந்தமான அந்த பணத்தை மறைத்தது மற்றும் அதனை மாற்ற முயன்றதாக 63 வயதான நான்கு பிள்ளைகளுக்கு தாயான ஜரித்தோன் சாடியா புஹாரி ( Jaritan Sa’adiah Buhari ) என்பவர் மீது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகமட் கப்லி சே அலி ( Mohd Kafli Che Ali) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம்தேதிக்கும் மார்ச் 8 ஆம் தேதிக்குமிடையே உணவகம் ஒன்றில் இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 424ஆவது விதியின் கீழ் தனித்து வாழும் தாயான ஜரித்தோன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அப்பெண்ணுக்கு கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம். ஜரித்தோனுக்கு 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பிப்ரவரி 5ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிபதி Mohd Kafli Che Ali தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!