Latestமலேசியா

ரி.ம 3.1 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகள் மதுபானங்கள் பறிமுதல்

கோலாலம்பூர் , ஜன 19 – Johor Baru, Segamat மற்றும் d Pasir Gudang கில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 3. 12 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பாசிர் கூடங் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் பரிசோதனையில் மூன்று கொள்கலன்களில் வரி செலுத்தப்படாத மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் சுங்கத்துறையின் இயக்குனர்.

Misbahudin Parmin தெரிவித்தார். மேலும் உலுத்திராமிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வங்காளதேச ஆடவனும் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கடத்தல்காரர்கள் அந்த மதுபான பெட்டிகளின் மேல் ஆப்பிள் Juice என்ற முத்திரை ஒட்டியிருந்ததாகவும் ஆனால் அந்த பெட்டியில் பரிசோதித்தபோது அதன் உள்ளே பீர்கள் இருந்ததாக Misbahhudin தெரிவித்தார். அந்த மதுபானங்கள் சீனாவிலிருந்து இங்கு கடத்திவரப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார். அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 764,000 கடத்தல் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!