
ஜாசின், ஜன 7 – அனைத்துலக போதைப் பொருள் விநியோக கும்பலை முறியடித்த போலீசார் 3.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஷாபு மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மலாக்கா மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 2 பெண்கள் மற்றும் ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் DCP டத்தோ Zainol Samah தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகளில் இரண்டு தம்பதிகளும் அடங்குவர் என அவர் கூறினார். ஷாபு போதைப் பொருள் சாக்குகளிலும் தேயில் தூள் பொட்டலங்களிலும் கண்டுப் பிடிக்கப்பட்டன. பிளாஸ்டிக் பைகளில் 5,000 போதை மாத்திரைகள் இருந்ததாக Zainol தெரிவித்தார். அந்த கும்பலிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், நான்கு கார்கள், நகைகள், ரொக்கம் மற்றும் வெளிநாடுகளின் நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.