
ஜோகூர் பாரு, ஜன 10 – கூலாய் மற்றும் இஸ்கந்தர் புத்ரி வட்டாரத்தில் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருள் வினியோக கும்பலைச் சேர்ந்த ஒரு தம்பதியர் உட்பட 13 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 365,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ Kamarul Zaman Mamat தெரிவித்தார். அவற்றில் 9. 29 கிலோ ஹரோய்ன், 1,643 போதை மாத்திரைகளும் அடங்கும் என்று இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.