Latest

தாய்லாந்தில் முதல் முறையாக, அரிய வெள்ளை திமிங்கிலம் கண்டுபிடிப்பு

புக்கெட், ஜன 13 – தாய்லாந்து, கிராபியிலுள்ள, Phi Phi தீவுக்கு அருகில், அந்தமான் கடல் பகுதியில், வெள்ளை திமிங்கிலம் ஒன்று நீந்தி கொண்டிருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கும் முதல் வெள்ளை திமிங்கிலமாக இருக்கலாம் என கடல்வாழ் உயிரியலாளர்கள் நம்புகின்றனர்.

அதே சமயம், தாய்லாந்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் முதல் திமிங்கிலமும் அதுவாகும்.

படகில் பயணம் செய்துக் கொண்டிருந்த சுற்றுப் பயணி ஒருவர், அந்த திமிங்கிலத்தை பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வெள்ளைத் திமிங்கிலம் எந்த இனத்தை சேர்ந்தது என்பது சரியாக தெரியவில்லை.

எனினும், தென்கிழக்காசியா மற்றும் ஜப்பானிய கடல் பகுதியில், அதிகம் காணப்படும், அரிய ஒமுரா வகை திமிங்கிலமாக அது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!