
தானா மேரா, செப் 11 – கிளந்தான் , தானா மேராவில் போலீஸ் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் சுமார் 400,0000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர். இவற்றில் 200க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 183 கிரெம் ஷாபு போதைப் பொருள் ஆகியவையும் அடங்கும் என தானா மேரா OCPD முஹமட் ஹகி ஹஸ்புல்லா தெரிவித்தார். அதோடு 29 மற்றும் 46 வயதுடைய இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவும்பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.