
கோலாலம்பூர். ஜன 24 – இம்மாதம் 1ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 64 .77 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வனவிலங்கு குற்ற விசாரணைப் பிரிவு, புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் சிறப்பு, வேவு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்த 15 நபர்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர் என புக்கிட் அமான் போலீஸ் செயலாளர் Noorsiah Saudin தெரிவித்தார்.