Latestமலேசியா

ரெம்பாவில் சவூதி அரேபிய ஆடவரிடம் போலீஸ் பணம் கேட்டு மிரட்டலா? விசாரணைத் தொடங்கியது

ரெம்பாவ், நவம்பர்-20, நெகிரி செம்பிலான், ரெம்பாவில் சில போலீஸ்காரர்கள் தம்மிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, சவூதி அரேபிய ஆடவர் புகார் செய்துள்ளார்.

திங்கட்கிழமையன்று ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் வாகனமோட்டிச் சென்ற 50 வயது அந்நபரை, சில போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் தன்னை மிரட்டிப் பணம் கேட்டதாக, அவ்வாடவர் தனது புகாரில் கூறினார்.

இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் அப்புகார் விசாரிக்கப்படுவதாக, ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் DSP Shaik Abd Kadar Shaik Mohamed தெரிவித்தார்.

போலீசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் வீரர்களுடன் அனுசரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!