ரெம்பாவ், ஏப்ரல்-10 நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 5 முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்துத் தாக்கியதில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நால்வர் காயமுற்றனர்.
அவர்களில் ஒருவர் கைமுறிவுக்கு ஆளானார்.
Kampung Senama-வில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
முகமூடியுடன் ஆயுதமேந்திய அக்கும்பல் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 3
வங்காளதேசிகளையும் ஒரு மியான்மார் நாட்டவரையும் காயமேற்படும் அளவுக்கு தாக்கியிருக்கிறது.
பின்னர் அவர்களின் 3 கைப்பேசிகளையும் 3,400 ரிங்கிட் ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பியோடியது.
கொள்ளையர்கள் தாக்கியதில் மூவருக்குத் தலையில் காயமேற்பட்டு தையல்கள் போடப்பட்டன; கைமுறிவுக்கு ஆளான மற்றொருவர் துவாங்கு ஜஃபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.