Latestஉலகம்விளையாட்டு
ரொனால்டோவின் யூடியூப் சேனல்; 90 நிமிடங்களில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் – உலக சாதனையை முறியடித்தார்
போர்த்துகல், ஆகஸ்ட் 22 – பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) புதிய யூடியூப் சேனலை தொடங்கி, 90 நிமிடங்களில் 1 மில்லியனுக்கு அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராவர்.
சமூக ஊடகங்களில் active-ஆக இருக்கும் ரொனால்டோ, தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதற்கு “UR . Cristiano” என அவர் பெயரிட்டுள்ளார். அவரது சேனலை தற்போதுவரை 12.4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
இதனிடையே, ரொனால்டோவிற்கு X தளத்தில் 112.5 மில்லியன் பின்தொடர்பாளர்களும், முகநூலில் 170 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பின்தொடர்பாளர்களும் உள்ளனர்.