
ரொம்பின், ஆக 25 – நேற்று ரொம்பினில் லுபுக் பத்து ஆற்றில் சிற்பி தேடச் சென்ற 14 வயது இளைஞன் ஒருவனை காணவில்லை.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசார், ஆற்றின் நீரோட்டம் அதிகரித்த நிலையில், சிற்பி தேடிக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அவனது நண்பர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.
தீயணைப்பு படை மற்றும் கிராம மக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை நேற்று தொடங்கப்பட்ட போதிலும், பலன் கிடைக்காத நிலையில் நேற்றி இரவு 8.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக போலிஸ் கூறியுள்ளது.
இன்று மீண்டும் அச்சிறுவனை தேடும் நடவடிக்கை தொடங்கப்படும்.