
முனிச், செப்டம்பர் 18 – அக்டோபர்பெஸ்ட் (Oktoberfest) விழாவின் போது, இரு ‘ரோலர் கோஸ்டர்’ இரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில், எண்மர் சிராய்ப்பு காயங்களுக்கு இலக்காகினர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், சிறு காயங்களுக்கு இலக்கான வேளை ; மூவர் மட்டும் மேல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
அந்த விபத்தை தொடர்ந்து, ஹோலன்பிளிட்ஸ் (Hollenblitz) என அழைக்கப்படும் அந்த விளையாட்டு, விசாரணைக்கு வழிவிடும் வகையில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
சுமார் 30 பயணிகளுடன் பயணித்த ரோலர் கோஸ்டர் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு ரோலர் கோஸ்டரை மோதி விபத்துக்குள்ளானது. எனினும், அவ்விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.