
கோலாலம்பூர், ஆக 24 – வேலையில்லாத டத்தோ ரோஸ்மா மன்சோரின் Affin Bank Berhad வங்கிக் கணக்கில் பெரிய அளவில் பணம் வந்ததை அரசு தரப்பு நீதிமன்றத்தில் நிருபிக்கும் என டி.பி.பி Ahmad Akram Gharib தெரிவித்தார். ரோஸ்மாவுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினரின் தொலைபேசி கட்டணங்களை கட்டுவதற்கும் வங்கியில் Current Account பணத்தை அவர் பயன்படுத்தினார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் துணைவியாருமான ரோஸ்மாவுக்கு எந்தவொரு சட்டப்பூர்வ தனிப்பட்ட வருமானம் எதுவும் கிடையாது.
ஆனால் தொலைபேசி கிட்டணம் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவதற்கு கையெழுத்திட்டு காசோலைகளை ரோஸ்மா பயன்படுத்தி வந்துள்ளார் என நீதிபதி கே.முனியாண்டி முன்னிலையில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையில் டி..பி.பி Ahmad Akram தெரிவித்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ரோஸ்மாவுக்கு எதிரான 12 குற்றாச்சட்டுக்கள் மீதான முதல்நாள் விசாரணையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் வங்கியில் போடப்படும் பணம் எங்கிருந்து பெறப்படுகிறது என்ற தகவலையும் வருமான வரி வாரியத்திற்கு அவர் தெரிவிக்கவில்லை என்றும் அகமட் தெரிவித்தார்.