
கோலாலம்பூர், மார்ச் 23 – ரோஸ்மா மன்சோருக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் அரசு தரப்பு 13 சாட்சிகளை அழைத்துள்ளது. மே மாதம் 12 ஆம்தேதி தொடங்கி 15 நாட்களுக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறும். உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பான விளக்கத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் Poh Yih Tinn வெளியிட்டார். 11 சாட்சிகளின் எழுத்துப் பூர்வமான அறிக்கைகள் தயாராய் இருப்பதாகவும் இதர இருவர் வாய்மொழி ரீதியிலான சாட்சியத்தை வழங்குவார்கள் என அவர் கூறினார்.