Latestமலேசியா

குழந்தைகளை பராமரிப்பதற்கு லோவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து பெர்லீஸ் இஸ்லாமிய மன்றம் அப்பீல் நீதிமன்றத்தில் முறையீடு

புத்ரா ஜெயா, நவ 17 – ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட வயது குறைந்த குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை முஸ்லீம் அல்லாத இந்து தாயாரான லோ சியூ ஹாங்கிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து பெர்லீஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் மன்றம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும். மூன்று ஆண்டுகளுக்கு முன் தமது குழந்தைகளை முஸ்லீம்களாக மாற்றப்பட்டதை தொடர்ந்து அந்த பிள்ளைகள் முஸ்லீம்கள் என உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக லோ செய்திருக்கும் மேல் முறையீடு குறித்த விசாரணையும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பெர்லீஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் மன்றம் முறையீடு மீதான விசாரண அவசரமாக நடைபெறவேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவுக்கு ஏற்ப அந்த விசாரணை நடைபெறுவதாக லோவின் வழக்கறிஞர் குணமலர் தெரிவித்தார்.

MAIPs எனப்படும் பெர்லீஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் மன்றத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி ஹுசைஃபா ஷெரீப் அகமட் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து மேல் முறையீடு நீதிமன்றத்தில் விசாரணக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லோவின் மூன்று பிள்ளைகளும் தாங்கள் தொடர்ந்து முஸ்லீம்களாக இருக்க விரும்பவில்லையென தம்மிடம் கூறியிருப்பதால் அக்குழந்தைகளின் நலனில் பெர்லீஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் மன்றம் கொண்டிருக்கவில்லை என்பதால் அதன் மனுவை நிராகரிப்பதாக கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ் முடிவு செய்ததோடு அந்த மூன்று குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமையை லோவுக்கு வழங்குவதாக தீர்ப்பளித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!