Latestமலேசியா

ரோஸ்மாவுக்கு சரியான தீர்ப்பைத்தான் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது – மகள் அஸ்ரின்

கோலாலம்பூர், செப் 2 – சரவாக்கில் 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய சக்தி மின்சார விநியோகத் திட்டத்தில் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் தமது தாயார் ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்டட தீர்ப்பு சரியான ஒன்றுத்தான் என அவரது மகள் அஸ்ரின் அகமட் தெரிவித்துள்ளார். ரோஸ்மாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அஸ்ரின் கருதுத்துரைத்துள்ளார். நீதிமன்றத்தின் முடிவு மதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை கூட்டரசு நீதிமன்றம்வரை மேல் முறையீடு செய்ய முடியும் . நமது நீதிமன்றத்தில் மேல் முறையீடு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதையும் அஸ்ரின் தெரிவித்தார். எந்தவொரு அச்சமின்றி , ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் எடுத்துள்ள துணிச்சலாக முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!