கோலாலம்பூர், பிப் 26 -Astro Malaysia Holdings Bhd ட்டின் முன்னாள் தலைமை நிர்வாகி Rohana Rozhan -னின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கை முடக்குவதற்கு MACC உத்தரவு பிறப்பித்துள்ளது. 1 MDB பணத்தை பயன்படுத்தி லண்டனில் அவர் வாங்கியதாக நம்பப்படும் வீட்டின் உரிமம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக MACC தகவல்கள் கூறின. பிரிட்டனில் உள்ள தனது வங்கி கணக்கு தொடர்பில் எந்தவொரு பரிமாற்றம் செய்வதற்கும் Rohana தடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் Goldman Sachs வங்கியாளர் Tim Leissner அமெரிக்க நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது லண்டனில் 10 மில்லியின் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கு கொடுக்கும்படி Rohana கோரியிருந்ததாக கூறியிருந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான விசாரணையை MACC தொடங்கியுள்ளது.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்11 hours ago