Latestமலேசியா

லங்காவிக்கு எல்.ஆர்.டி ஆலோசனைக்கு போக்குவரத்து நிபுணர்களின் கருத்து சாதகமாக இல்லை

கோலாலம்பூர், மே 7 – லங்காவியில் LRT வசதியை அமைக்கும் திட்டத்திற்கு போக்குவரத்து வல்லுநர்கள் சாதகமான கருத்தை கொண்டிருக்கவில்லை. அங்கு LRT மேற்கொள்ளும் திட்டம் சாத்தியமான சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் குறைவான பயணிகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

லங்காவியில் LRT திட்டத்தை கொண்டு வருவது தீவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அந்த தீர்வையற்ற தீவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விவகாரத்தில் நமது காலுக்கு நாமே சூடுவைத்துக்கொள்வதாக இருக்கும் என போக்குவரத்து ஆலோசனையாளரான Wan Agyl Wan Hassan ஒப்பிட்டுள்ளார்.

லங்காவி தீவை பொறுத்தவரை சுற்றுச்சூழல் விவகாரம் உணர்வுப்பூர்வமான அம்சமாக உள்ளது. அங்குள்ள அனைத்தையும் நாங்கள் பாதுகாப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். இது ஒரு பெரிய கட்டுமானத் திட்டம் என்பதால் LRTயின் கட்டுமானத்திற்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும்.

LRTயின் வளர்ச்சியே சுற்றுலாப் பயணிகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு லங்காவிக்கு வரவிடாமல் தடுக்கும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பொருளாதாரத்தை பாதிக்கும் என்று Wan Agyl Wan Hassan தெரிவித்தார்.

லங்காவியில் சுற்றுலாவின் பருவகால தன்மை ,குறைந்த தேவை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லையென போக்குவரத்து ஆலோசகர் Rosli Khan கூறினார். LRT ஆலோசனைக்கான ஆய்வு ஒன்றை ஆறு மாதத்திற்குள் மேற்கொள்வதற்கு Permodalan Kedah Bhd கொரியாவின் Royal Eco Train Development நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த வாரம், கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் Haim Hilman Abdullah கூறியிருந்தார். Kuah ferry முனையத்திலிருந்து Pantai Cenang வரை LRT பாதையை படிப்படியாக தீவில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!