
கிள்ளான், ஆக 18 – விமான விபத்தில் மரணம் அடைந்த பகாங் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜொஹாரி ஹருனை ஆகக்கடைசியாக லங்காவியில் நடைபெற்ற கூட்டத்தில் சந்தித்ததாக பகாங் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார். சுறுசுறுப்பான மற்றும் துடிப்பாக செயல்படும் ஆட்சிக்குழு உறுப்பினராக ஜொஹாரி இருந்ததாகவும் அவரது மரணம் பெரிய இழப்பு என இன்று அதிகாலையில் கிள்ளான் HTAR மருத்துவமனையில் ஜொஹாரியின் குடும்பத்தினரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது வான் ரோஸ்டி தெரிவித்தார். வாரந்தோறும் ஆட்சிக்குழு கூட்டத்தில் நாங்கள் சந்திப்போம். நேற்று கூட லங்காவியில் நடைபெற்ற கூட்டத்திலும் அதன் பின் மதிய உணவிலும் அவருடன் பேசிக்கொண்டிருந்த தருணங்களை தம்மால் மறக்க முடியவில்லை என வான் ரோஸ்டி கூறினார். தமது துறையின் கீழ் இயங்கும வீடமைப்பு துறை சம்பந்தப்பட்ட திடடத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஜொஹாரி பேசியதாகவும் அவர் கூறினார்.