லங்காவி, செப்டம்பர்-19 – லங்காவியில் உள்ள Pantai Chenang, Pantai Tengah கடற்கரைகளில், அபாயத்தைக் குறிக்கும் சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அவ்விரு கடல்களிலும் தற்போது பெரிய அலைகள் எழும்புவதுடன், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
கடற்கரைகளில் எங்கெல்லாம் சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் உல்லாச நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்பதை பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக சுற்றுப் பயணிகள், அந்த அபாய எச்சரிக்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை மோசமாகி ஆபத்து ஏற்படும் அபாயமிருந்தால், அங்கிருக்கும் பொது மக்களுக்கு, ரோந்துப் பணியிலிருக்கும் அதிகாரிகள் அறிவுரை வழங்குவர் என, லங்காவி மாவட்ட இயற்கைப் பேரிடர் நிர்வாகக் குழு கூறியது.
பல்வேறு அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பேரிடர் நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டுள்ளது.