
லங்காவி, நவ 19 – லங்காவியை சுற்றுலா மையமாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் கூட்டரசு அரசாங்கத்துடன் கெடா அரசு ஒத்துழைக் வேண்டும் என சுற்றுலா, கலை மற்றும் கலச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். லங்காவியில் சுற்றுப்பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் செயல்முறை திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கக்கூடிய தெளிவான சுற்றுலா கொள்கையை கெடா மாநில அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
லங்காவியை சுற்றுலா மையமாக ஊக்குவிக்கும் செயல் நடவடிக்கைகளில் Tourism Malaysia தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சியில் Tourism Malaysia பின் வாங்கியதில்லை. ஆனால் கெடா மாநில அரசாங்கத்தின் கொள்கை தொடர்ந்து உறுதியற்ற நிலையில் இருப்பதோடு சுற்றுலா தொழில்துறையில் சமய அம்ச கண்ணோட்டத்திலும் செயல்படுகிறது . இது போன்ற அம்சங்களால் மக்கள் லங்காவிக்கு வருகை புரிவதில் ஆர்வம் செலுத்துவதில்லை என தியோங் கிங் சிங் சுட்டிக்காட்டினார்.