புத்ராஜெயா, பிப் 17 – நாட்டின் அனைத்துலக எல்லை திறக்கப்படும் வரை, மேம்படுத்தப்பட்ட SOP – களுடன் லங்காவி அனைத்துலக சுற்றுலாத் திட்டம் தொடரும்.
அந்த பயணத் திட்டத்தின் போது பின்பற்றப்படும் அதே SOP- கள் நாட்டின் எல்லை திறக்கப்படும்போதும் பயன்படுத்தப்படுமென சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Nancy Shukri தெரிவித்தார்.
இதனிடையே, அந்த பயணத் திட்டத்தின் கீழ் லங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் 50,000 அமெரிக்க டாலர் பெருமானமுள்ள கோவிட் -19 மருத்துவ காப்புறுதியை வாங்கியிருக்க வேண்டும்.