
லங்காவி, செப்டம்பர் 1 – லங்காவி நெடுஞ்சாலையில், MPV பல்நோக்கு வாகனத்தை உட்படுத்திய கோர விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதனை லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஷாரிமான் ஹசாரி உறுதிப்படுத்தினார்.
சுல்தானா மலிஹா மருத்துவமனையின், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த,முஹமட் பில் ரஸ்வாயில் ஜைனுடின் நேற்றிரவு 10.53 வாக்கில் உயிரிழந்த வேளை ; முஹமட் ஹைகால் ஹகிம் இன்று காலை மணி 8.59 வாக்கில் மரணமடைந்தார்.
அவர்களின் உடல் குடும்லத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதையும் ஷாரிமான் உறுதிப்படுத்தினார்.
மழையின் போது, வழுக்கலாக இருந்த சாலையில் பயணித்த MPV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நால்வரில் இருவர் படுகாயமடைந்ததாக நேற்று செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.