கோலாலம்பூர், மார்ச் 1 – எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கி லங்காவிக்கு பயணம் மேற்கொள்பவர்கள், அத்தீவை வந்தடைந்த பின்னர் 2-வது , 4-வது, 6-வது நாட்களில் கோவிட் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்த SOP விலக்கு, மலேசிய- சிங்கப்பூர் VTL திட்டத்தின் வாயிலாக பயணிப்பவர்களையும், ஓரிட மையங்களின் வாயிலாக பயணிக்கும் வர்த்தக பயணிகளையும் உட்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன், பிரிட்டனிலிருந்து மலேசியா வந்தடையும் பயணிகள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் கால கட்டத்தில் கோவிட் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.