Latestமலேசியா

பினாங்கு போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறையின் இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் மாரடைப்பினால் இறந்தார்

ஜோர்ஜ் டவுன், ஜன – பினாங்கு குற்றப்புலனாய்வுத்துறையின் இன்ஸ்பெக்டர் ஆர். குணேஸ் ரா மாரடைப்பினால் இறந்தார். கடும் குற்றப்பிரிவான D 9 பிரிவைச் சேர்ந்த ஆர். குணேஸ் ரா மாநில குற்றப்புலனாய்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த போதைப் பொருள் மற்றும் லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு மீதான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும் சடங்கில் கலந்துகொண்ட பின் கழிவறைக்கு சென்றபோது மாரடைப்புக்கு உள்ளானதாக கூறப்பட்டது. 35 வயதுடைய ஆர். குணேஸ் ரா கழிவறையில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு மரணம் அடைந்தததாக உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் உறுதிப்படுத்தியதோடு மறைந்த குணேஸ் ரா அர்ப்பணிப்பும் பணியின்போது நல்ல ஆற்றலும் கொண்டவராக விளங்கியவர் என புகழாரம் சூட்டினார். இன்ஸ்பெக்டர் குணேஸ் ரா வின் மறைவு பினாங்கு போலீஸ் படைக்கு பெரிய இழப்பு என அவர் கூறினார். காலஞ்சென்ற குணேஸ் ரா வுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த வேளையில் அவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் காவ் கோக் சின் தெரிவித்துக் கொண்டார். இதற்கு முன் காவ் கோக் சின்னுடன், பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமட் மற்றும் குற்றவியல் விசாரணைத்துறையின் தலைவர் உயர் துணை ஆணையர் ரஹிமி ராய்ஸ் ஆகியோர் பினாங்கு மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர்  காவ் கோக் சின்வின் குடும்பத்தினரை சந்தித்து தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!