
அலோர் ஸ்டார், ஜன 4 – குவாலா கெடாவிலிருந்து லங்காவி தீவுக்கான பெர்ரி பயணப் படகு சேவை, ஜனவரி 9-ஆம் தேதியிலிருந்து நாளொன்றுக்கு 5 முறையாக அதிகரிக்கப்படும்.
பெர்ரி பயணிக்கும் வழி நெடுகே தூர்வாரும் பணிகள் முடிவுற்றிருப்பதை அடுத்து, அந்த பயணச் சேவை அதிகரிக்கப்பட்டிருப்பதாக , அவ்விரு பகுதிகளுக்கு இடையில் பெர்ரி சேவையை மேற்கொள்ளும் Ferry Line Ventures நிறுவனம் தெரிவித்தது. இந்த பயணச் சேவை அதிகரிப்பின் மூலமாக, லங்காவி சுற்றுலா துறையை மேலும் ஊக்குவிக்க முடியுமென அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.