லங்காவி, அக்டோபர்-13,
லங்காவியில் நடைபெற்ற Ironman Malaysia போட்டியின் போது தான் ஓட்டிச் சென்ற சைக்கிள், சாலையில் விழுந்த மரக்கிளையை மோதி குப்புற விழுந்ததில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் காயமடைந்தார்.
சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்த போது, அந்த அனைத்துலகப் போட்டியின் சைக்கிளோட்டப் பிரிவில் அவர் பங்கேற்றிருந்தார்.
சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்ட போதும் 31 வயது அந்த முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர், பின்னர் போட்டியைத் தொடர்ந்தார்.
சைக்கிளோட்டத்தை முடித்து, கடைசி பந்தயமான மரத்தோன் ஓட்டத்தையும் அவர் வெற்றிகரமாக நிறைவுச் செய்தார்
விபத்து எப்படி நிகழ்ந்தது, சைட் சாடிக்கின் காயம் எந்தளவுக்கு இருந்தது என்பது குறித்து தகவல் இல்லை.
Ironman Malaysia போட்டி, 3.8 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிளோட்டம், 42.2 கிலோ மீட்டர் மரத்தோன் ஓட்டம் ஆகியவற்றை உட்படுத்தியதாகும்.