
ரியோ டி ஜெனிரோ , ஜூன் 1 – பிரேசிலின் முன்னாள் அதிபர் Fernando Collro de Mello லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோ பண பரிமாற்ற குற்றத்திற்காக 8 ஆண்டுகள் 10 மாத சிறைத் தண்டனை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விதித்தது. 76 வயதுடைய Fernando அரசாங்க எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 6 மில்லியன் அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 20 ஆண்டு கால ராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப்பின் 1989 ஆம் ஆண்டு பிரேசிலில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை Fernando பெற்றிருந்த போதிலும் மூன்று ஆண்டுகளுக்கு பின் அவர் பதவி விலகினார்.