
கோலாலம்பூர், ஜன 11 – லண்டனுக்கு தாம் சென்றிருந்த வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒன்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் லண்டன் முன்னெடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியதாகவும் ஆனால் அது தொடர்பான எந்தவொரு பேச்சுக்களிலும் தாம் பங்கேற்கவில்லையென அம்னோவின் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ மாட்ஷீர் காலிட் தெரிவித்தார். அதோடு அப்படியொரு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற முறையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு நான் ஆதரவு கொடுத்துள்ளேன். அப்படியிருக்கும்போது எப்படி அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையில் பங்கெடுப்பேன் என்று முன்னாள் அமைச்சருமான மாட்ஷிர் காலிட் வினவினார்.