Latestஉலகம்மலேசியா

லண்டனில் மலேசிய இந்தியருக்குச் சொந்தமான உணவகத்திற்கு பேரரசர் வருகை

லண்டன், அக் 23- பிரிட்டனுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுலா மேற்கொண்டிருக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் நேற்று அங்குள்ள மலேசிய இந்தியர் ஒருவரின் உணவகத்தில் மதிய உணவை உட்கொண்ட புகைப்படங்களை இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ளது.

லண்டனிலுள்ள Market Hall Victoriaவில் Gopal’s Corner எனும் அந்த உணவகம் மலேசியாவில் பிறந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்தியரின் கடை என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் Roti canai மற்றும் Kari Kepala Ikan ஆகியவைகளுக்கு Gopal’s Corner உணவகம் மிகப் பிரபலம் எனக் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று பிரிட்டனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பேரரசரும் அவரது துணைவியாரும் அடுத்த வாரம் மலேசியாவுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!