கோலாலம்பூர், பிப் 24 – Goldman Sachs நிறுவனத்தில் வேலைக்காக தாம் முயன்றதாகவும், எனினும் மலேசிய அரசாங்கத்துடன் அந்த நிறுவனம் வர்த்தக ஒத்துழைப்பைக் கொண்டிருந்ததால், அந்த எண்ணத்தை தாம் கைவிட்டதாகக் கூறியுள்ளார், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்பின் மகளான நூர்யானா நஜ்வா ( Nooryana Najwa ).
எனினும், வேலை தொடர்பில் தாம், Goldman Sachs நிறுவனத்தின் இரு முன்னாள் ஊழியர்களான Roger Ng- கையும், Tim Leissner –ரையும் சந்தித்தது உண்மையென அவர் கூறியுள்ளார்.
Tim Leissner, லண்டனிலுள்ள தனியார் பங்கு நிறுவனமான TPG நிறுவனத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அங்கு நான் ஒரு பயிற்சியாளராகவே சேர்ந்தேன். PowerPoint செய்வது, போட்டொஸ்டேட் பிரதி எடுப்பது, காப்பி தயார் செய்வது போன்ற பணிகளையே தொடக்கத்தில் தாம் செய்து வந்ததாக நூர்யானா தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். 11 மாதங்கள் பயிற்சிக்குப் பின்னரே முழு நேர பகுப்பாய்வாளராக தமக்கு அங்கு பணி உயர்வு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமது 3 பிள்ளைகளுக்கு Goldman Sachs நிறுவனத்தில் நஜிப் வேலை கேட்டிருந்ததாக, ஜோ லோ தன்னிடம் கூறியிருந்ததாக, இரு தினங்களுக்கு முன்பு நியு யோர்க்கில் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது Tim Leissner கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மூன்று பிள்ளைகளில் யாருக்கும் Goldman Sachs நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை என நேற்று டத்தோ ஶ்ரீ நஜிப் கூறியிருந்தார்.