கோலாலம்பூர், ஜன 4 – Macc யின் தலைவர் Azam Baki யின் பங்கு உரிமை விவகாரம் தொடர்பில் எழுதிய கட்டுரை தொடர்பில் கட்டுரையாளர் Lalitha Kunaratnam த்திடம் போலீசார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு தாம் எழுதிய இரண்டு கட்டுரைகள் தொடர்பில் போலீசார் எழுப்பிய 83 கேள்விகளுக்கும் தாம் பதில் அளித்ததாக Lalitha தெரிவித்தார். என்னால் முடிந்தவரை போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். 15 பக்கத்திற்கு எனது அறிக்கை அமைந்திருந்தது. அதோடு என்னிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி நிபுணத்துவமாக நடந்துகொண்டார் என புக்கிட் அமானில் செய்தியாளர்களிம் லலிதா தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago